Monday, March 26, 2012

குரங்கு அருவி - மங்கி பால்ஸ் (MONKEY FALLS)பொள்ளாச்சி


குரங்கு அருவி மங்கி பால்ஸ்
இன்னிக்கு எங்காவது வெளில போலாம்னு முடிவு பண்ணிட்டு வீட்டுல இருந்து காலை டிபன்க்காக இட்லி சட்டினி லாம் எடுத்து  கிட்டு காலையில் 9 மணிக்கு பொள்ளாச்சி பக்கம் இருக்கிற மங்கி பால்ஸ் போனோம்...(பொள்ளாச்சி யில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் இருக்கிறது) முதல்ல ஆழியார் ..அப்புறம் செக் போஸ்ட்.

(ஒருஆளுக்கு 15 ரூபாய் டிக்கெட் வாங்குறாங்க) .அப்புறம் மங்கி பால்ஸ்.போன உடன் நம்மை அந்த அருவிக்கு சொந்த காரங்க ளான குரங்குகள் நம்மை வரவேற்கின்றன.
 

உள்ளே போனால் தண்ணீர் வரத்து கம்மியா இருக்கு..அங்க இருக்கிற பாறைலாம் பல்லு இளிக்குது..எல்லாம் வறண்டு போய் இருக்கு...ஏதோ அருவி அப்படிங்கிற துக்காக கொஞ்சம் சன்னமா வருது...




ஓகே..முதல்ல சாப்பிட்டு விட்டு வருவோம் ன்னு நினைச்சு வால்பாறை ரூட்டுல கொஞ்ச தூரம் மேல போனோம்...இரண்டு ஹேர் பின் வளைவுகள் போய் அங்க ஒரு இடத்துல காரை நிறுத்தி விட்டு இருந்த ஒரு பாலம் மேல உட்கார்ந்து, எதிர்த்தாப்புல  தெரிஞ்ச ஆழியார் டேம் அணை தண்ணீரை பார்த்து கிட்டே கொண்டு போன இட்லி களை உள்ளே தள்ளுனோம்...


அப்புறம் அப்படி இப்படி போட்டோ எடுத்து கிட்டு மீண்டும் மங்கி பால்ஸ் வந்தோம்.மீண்டும் குரங்குகள் வரவேற்றன.குளிக்க ஆயத்தம் ஆகி பாறையோடு பாறையா வந்து கிட்டு இருக்கிற தண்ணீர்ல கை வச்சி குளிச்சோம்..பல்லி மாதிரி ஒட்டிகிட்டே குளிச்சோம்...தண்ணீர் குறைவா இருந்தாலும் குளிர்ச்சி ரொம்ப அதிகமா இருந்துச்சு...அங்க அடிச்ச வெயிலுக்கு இது ரொம்ப இதமா இருந்துச்சு...ஒரு மணி நேரம் பக்கம் அந்த இனிய குளிரினை அனுபவித்தோம்...எப்பவும் போல மக்கள் வந்து கொண்டே இருந்தனர்..தண்ணீர் வரத்து கம்மியா இருந்தது னால என்னவோ வந்தவங்க முகம் சுருங்கி போய் ஆச்சரியம் கலந்த பார்வையில் குளிக்கிறவங்களை பார்த்துட்டு போனாங்க.....

இந்த சீசனுக்கு தண்ணீர் ரொம்ப வரும்.. என்னமோ தெரியல..இப்படி வறண்டு போய் கிடக்கு...வால்பாறை போற ரூட்டுல இரண்டு பக்கமும் எப்பவும் பசுமையா இருக்கும்.இப்போ அது கூட இல்ல..ரொம்ப காஞ்சு போய் இருக்கு..மழை பெய்ய ஆரம்பித்து விட்டால் இங்கு எப்போதும் பசுமை இருக்கும் என்பது உறுதி..
இது ரொம்ப நல்ல இடம்...எப்பவும் பசுமையா இருக்கும்.இதை பார்த்தால் நம் மனசும் லேசாகும்..பக்கத்துல ஆழியார் டேம் இருக்கு..அங்க பார்க் லாம் இருக்கு..ஒரு நாள் சுற்றுலா செல்ல சிறந்த இடம் இது...பொள்ளாச்சி யில் இருந்து வால்பாறை செல்லும் அனைத்து பஸ் களும் இங்கு செல்லும்.

பொள்ளாச்சி  யில் இருந்து ஆழியார் செல்லும் வழியில் நா.மூ .சுங்கம் இருக்கு அங்க ஒரு ஹோட்டல் இருக்கு தாஜ் பிரியாணி... பொள்ளாச்சி பக்கத்தில் 
வரும்போது  இந்த கடைக்கு போனேன்..கூட்டம் அள்ளுது...அப்புறம் பக்கத்துல ரெண்டு மூணு கடை புதுசா ஓபன் ஆகி இருக்கு...
அப்புறம் இதுக்கு எதிர்த்த ரோட்டுல டாஸ்மாக் இருக்கு.இன்னிக்கு தான் கவனிச்சேன்.....(வரலாறு முக்கியம்)

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

7 comments:

  1. ஆமாங்க, வரலாறு ரொம்ப முக்கியம்....

    noted

    ReplyDelete
  2. மங்கி பால்ஸ்ல மங்கி மட்டும்தான் இருக்கு போல...
    பால்ஸ் இல்ல போல.....

    ஜீவா ரொம்ப தவிச்சிட்டார் போல...

    ReplyDelete
  3. தண்ணியே இல்ல அதான் பால்ஸ்

    ReplyDelete
  4. நாங்கள் குரங்குகளிடம் உளுந்தவடைகளை பறிகொடுத்த இடம்.

    //எதிர்த்த ரோட்டுல டாஸ்மாக் இருக்கு//

    அப்படியா....தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  5. நல்ல தொகுப்பு///

    ReplyDelete
  6. சண்டே எங்க போகலாலும்னு மண்டை போட்டு உடைச்சுகிட்டு இருந்தோம்.இப்ப முடிவு பண்ணிட்டோம் பவானி போகலாலும்னு நன்றி ஜீவா

    ReplyDelete
  7. jeeva,

    kovai kutralam patri eludhungal please.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....